பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) நேற்று காலமானார். இந்த செய்தி திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் அவரது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகச் சொல்லப்பட்டது.

பிறகு அவரது உடல் ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறுதியில் வாணி ஜெயராம் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை வாணி ஜெயராம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில், வாணி ஜெயராம் உடல் 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.