இன்றும் மூடப்படுகிறது வண்டலூர் உயிரியல் பூங்கா..!

மிக்ஜம் புயல் காரணமாக வண்டலூர் கேளம்பாக்கம் சாலை ஓரத்தில் உள்ள 4 இடங்களில் பூங்காவின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது. இதனால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளநீர் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குள் புகுந்தது.

மேலும் பூங்காவில் 30 மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனையடுத்து, நேற்று முன்தினமும், நேற்றும் பொதுமக்கள் பார்வைக்கு தடை செய்யப்பட்டு பூங்கா மூடப்பட்டது.

இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் நிறைவடையாததால் இன்றும் மூடப்படுகிறது என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News