வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் வடசென்னை. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனால், இந்த திரைப்படத்தின் 2-ஆம் பாகத்திற்காக, ரசிகர்கள் பலரும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் 2-ம் பாகம் குறித்து, வெற்றிமாறன் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதாவது, சமீபத்தில் விருது விழா ஒன்று நடந்துள்ளது. அதில் கலந்துக் கொண்ட வெற்றிமாறனிடம், வடசென்னை 2 குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பதில் அளித்த அவர், “வடசென்னை 2 திரைப்படம், விரைவில் எடுக்கப்படும். ஆனால், வடசென்னை 2 திரைப்படம் ஆரம்பித்த பிறகு, இந்த அளவு எதிர்பார்ப்பு இருக்காது என்று நினைக்கிறேன். ஆரம்பித்த பிறகு, அதன் மீதான உற்சாகம் குறைந்துவிடும்” என்று கூறியுள்ளார்.