அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் ஈஸ்ட் படேன் ரோக் பகுதியில் வசிப்பவர் 25 வயதான பிரியானா லாகோஸ்ட். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் சுமார் 2 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்துள்ளார்.
கருத்து வேறுபாடு பிரேக் அப் செய்து கொள்ளலாம் என கடந்த வாரம் முடிவு எடுத்துள்ளனர். இதையடுத்து ஜனவரி 13ஆம் தேதி இருவரும் வெளியே சென்று மது அருந்தியுள்ளனர். மது போதையில் தூங்கிக்கொண்டிருந்த அவரது பாய்பிரண்ட், இருவரும் ஒன்றாக படுத்திருந்த படுக்கையிலேயே சிறுநீர் கழித்துள்ளார்.

இதனால் கடுப்பான காதலி தனது பாய் பிரெண்டை அடிக்கத் தொடங்கியுள்ளார். பிறகு சமையல் அறை கத்தியை வைத்து காதலனை குத்தியுள்ளார். இதனால் அந்த நபரின் நுரையீரல் படுகாயமடைந்தது.
பிறகு அந்த இளைஞரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளார். இந்நிலையில், காவல்துறை பிரியனாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மேலும், அவர் மீது கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளது.