உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியை சேர்ந்தவர் சேஷாத். இவர், பாகிஸ்தானின் உளவுத்துறைக்காக, இந்தியாவில் வேவுபார்த்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்தியாவின் உளவுத்துறை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், சேஷாத்தை உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு அமைப்பு கைது செய்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தான் நாட்டிற்கு, சேஷாத் அடிக்கடி பயணம் செய்திருப்பதும், பாகிஸ்தானில் உள்ள பல்வேறு அழகு சாதன பொருட்களை, அவர் அங்கிருந்து இந்தியாவிற்கு கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
இதுமட்டுமின்றி, இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான, பல்வேறு விவரங்களை, பாகிஸ்தானின் உளவுத்துறைக்கு அவர் வழங்கியிருப்பதாகவும், அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக, பாகிஸ்தான் உளவுத்துறை ஆபரேஷன்களுக்கு, பல்வேறு வசதிகளையும் செய்துக் கொடுத்திருப்பதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது.