உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில், வேளாண்மைத்துறை அதிகாரிகள் உடன் ஆய்வுக் கூட்டம், நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வேளாண் துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள், பால்வளத்துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், பசு பாதுகாப்பு மையங்கள் அமைப்பதில், இந்தியா தற்சார்பு பொருளாதாரம் அடைவதை, உறுதி செய்ய வேண்டும் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாட்டு சாணங்களின் மூலமாக தயாரிக்கப்படும் பெயிண்டுகள், அரசு கட்டிடங்களில் பூசப்படுவதை, உறுதி செய்ய வேண்டும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இயற்கை மாட்டுத் தீவனங்ளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், மாட்டுத் தீவனங்களுக்காக புதிய வங்கி ஒன்றை நிறுவ வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.