நான்கு சக்கர வாகனத்தை திருடிய மா்ம நபா் ..! சிக்கிய CCTV காட்சி ..!

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள சாலை தெருவில் கிளன் மார்க் ஹோல் ராய்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் சனிக்கிழமை காலை விமான நிலையம் சென்று விட்டு நள்ளிரவில் 12 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். இதன் பிறகு வாகனத்தை எங்கும் எடுக்காமல் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த நிலையில் மறுநாள் தனது நான்கு சக்கர வாகனம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் மனுவை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்துள்ளார் இதற்கு வேப்பேரி காவல்துறையினர் தமிழில் புகார் எழுதி வருமாறு அவரை அலை கழித்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து புகார்தாரர் ஆன்லைன் மூலமாக காவல் நிலையத்திற்கு புகார் மனு அளித்துள்ளார் இந்த புகாரை கைப்பற்றிய போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர் காரை எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது.மேலும் இந்த நான்கு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற நபர் தொடர்பாக போலிசார் தொடா் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News