பிரிட்டன் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக், வடக்கு லண்டன் பகுதியில் தனது காரில் பின் சீட்டில் அமர்ந்தவாறு பயணித்தார். அப்போது அவர் தனது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பேசி வீடியோ ஒன்றை பதிவு செய்து இன்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.அந்த வீடியோ காட்சியில் அவர் காரில் சீட் பெல்ட் அணியாதது தெரியவந்தது.
அனைவரும் காரில் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். அப்படியிருக்க பிரதமரே சட்ட விதிகளை மீறி சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்கிறார் என்ற புகார் குவிந்தன.

இந்நிலையில், பிரதமரின் விதிமீறல் செயலுக்கு 100 பவுன்ட் தொகை அபராதமாக செலுத்த வேண்டும் என லாகன்ஷைர் காவல்துறை தெரிவித்தது. இது இந்திய மதிப்பின் படி இது ரூ.10,000 ஆகும்.
மறதியில் சிறிது தூரம் சீட் பெல்ட் அணியவில்லை என தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு ரிஷி சுனக் விளக்கம் கொடுத்தார்.