கிரீஸ் நாட்டில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்தில் 3 பெட்டிகள் எரிந்து நாசகமாகின.
லாரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 85 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தின் போது ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு துறையினரும் இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கியுள்ளவர்களை மீட்டனர்.
மீட்பு பணிகள் நடைபெற்று வரும் சூழலில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.