தன்னை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட விடாமல் இரண்டு அமைச்சர்கள் டார்ச்சர் செய்வதாக முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா முகநூல் பதிவில் வெளியிட்டுள்ள பதிவால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா,இவர் புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசில் போக்குவரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
கடந்த மூன்று ஆண்டு காலம் அமைச்சராக பதவி வகித்து வந்த சந்திர பிரியங்கா தனது அமைச்சர் பதவியை ஒரு வருடத்திற்கு முன்பு ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு காரைக்காலை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திர பிரியங்கா சட்டமன்ற உறுப்பினராக தொகுதி மக்களோடு ஒன்றிணைந்து தொகுதி பணிகளை கவனித்து வருகிறார்
இந்த நிலையில் முகநூல் பதிவில் சந்திர பிரியங்கா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில்….
தான் வகித்து வந்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும் தன்னை இரண்டு அமைச்சர்கள் தொடர்ந்து டார்ச்சர் செய்து வருவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த இரண்டு அமைச்சர்களும் தனக்கு பயங்கர டார்ச்சர் கொடுக்கிறார்கள். தான் செல்லும் பாதையில் கண்காணித்து, என்னைச் சுற்றி உளவாளிகள் உள்ளனர். நான் பாதுகாப்பான இடத்தில் இல்லை,” என்று வெளிப்படுத்தி உள்ளார்.
தான் அமைச்சராக இருந்தபோது சந்தித்த பிரச்சனைகளைக்கூட வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்று வேதனை தெரிவித்துள்ள அவர் முதல்வரையே அவர்கள் டார்ச்சர் செய்கிறார்கள் அனைத்தும் தெரிந்தும் முதல்வரும் பொறுத்துப் போகிறார்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது உயிருக்கு ஆபத்து என்று புகார் கொடுக்கச் சென்றால், போலீஸ் அதிகாரி தன்னை கிண்டலாகப் பேசுகிறார்கள் என்று குறிப்பிட்டு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளார்.
புதுச்சேரி அரசியலில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ காணொளி காட்சி மூலம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பு: முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள வீடியோ பதிவு உள்ளது