உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சதாம் என்பவர் திருவள்ளுர் மாவட்டத்தில் மின்சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் வாடிக்கையாளர் ஒருவருக்கு எல்இடி டிவி ஒன்றை எடுத்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் எல்இடி டிவியை பறித்து சென்றனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து சோதனை செய்த போலீசார், கொள்ளையர்கள், அருகில் உள்ள ஏரியில் இருப்பதை கண்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஏரியில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்ததுடன், எல்இடி டிவியையும் பறிமுதல் செய்தனர்.