சென்னை கிண்டியில் 230 கோடி மதிப்பீட்டில் 15 மாதங்களில் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகின. 51 ஆயிரத்து 429 சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.230 கோடி மதிப்பீட்டில், 7 மாடியுடன் 1000 படுக்கை வசதிகளை கொண்ட மருத்துவ மனை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் ஓராண்டாக தொடர்ந்து நடைபெற்று வந்து சென்ற மாதம் நிறைவடைந்தது.

மதுரை மாவட்டம் தோப்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். அதன் பிறகு கட்டுமானப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
அடிக்கல் நாட்டிய 15 மாதங்களில் கலைஞர் மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டுமானப்பணிகள் நடைபெறவில்லை. இதனை விமர்சனம் செய்யும் விதமாக ட்விட்டரில் #கலைஞர்இங்கேஎய்ம்ஸ்_எங்கே என்ற ஹேஷ் டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.