தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும்., தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பிறந்தநாள் நேற்று அவரது நண்பர்கள் மட்டுமின்றி ரசிகர்களும், தொண்டர்களும் கொண்டாடினர். மேலும் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தலைவர் விஜய்., எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்., “அரசியல் தலைவர்கள், திரைப்படம் மற்றும் ஊடகத் துறை நண்பர்கள், நலம் விரும்பிகள், உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள என் அன்பான உறுப்பினர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவு மக்களுக்கு சேவை செய்வதற்கான எனது பயணத்தை ஊக்குவிக்கிறது. பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒன்றாக அணிவகுப்போம்..” என பதிவிட்டுள்ளார்.