கும்மிடிப்பூண்டி அருகே பிறந்து 20 நாட்களே ஆனா குழந்தையை தாய் தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காடு பகுதியில் சாலையோரம் உள்ள குப்பைகளை சேகரித்து தங்களது வாழவதாரத்தை ஈட்டி வருகின்றனர் ஆந்திராவைச் சேர்ந்த நவீன்குமார் துர்கா தம்பதியினர்.
இவர்கள் உச்சகட்ட மது போதையில் பிறந்து 20 நாட்களான தங்களது ஆண் குழந்தையின் கழுத்தை நெரித்து கொல்ல முயற்சித்துள்ளனர்., குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர்., குழந்தையை கைப்பற்றி 108 அவசர சேவை குழுவினர் மூலம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.,
அதில்., அவர்களுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில்., தற்போது 4வது குழந்தை பிறந்துள்ளதால் குழந்தையை கொள்ள முயற்சித்ததாக தெரிவித்துள்ளனர்.