அதிமுக முன்னாள் நிர்வாகி, ஏ.வி.ராஜூ சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், நடிகை த்ரிஷா குறித்து, ஆபாசமான முறையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இவரது இந்த சர்ச்சை பேச்சு, இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை த்ரிஷாவும் பதிவு ஒன்றை வெளியிட்டு, தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, தன்னுடைய சட்ட ஆலோசகர்கள் தான் இனி பேசுவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், ஏ.வி.ராஜூ-க்கு நடிகை த்ரிஷா தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், நடிகை த்ரிஷாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காகவும், அவரது நன்மதிப்பு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காகவும், நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பதிவிட்டுள்ள நடிகை த்ரிஷா, வக்கில் நோட்டீஸின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.