கொடைக்கானல் கீழ்மலை கிராமமான கோர கொம்பு மலைக் கிராமத்தில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, பாரம்பரிய நடனமாடியும்,பாரம்பரிய பாடல் பாடி உற்சாகம் அடைந்த பழங்குடியினர்,தற்போது வரை அடிப்படை வசதிகளின்றி கஷ்டம் அடைவதாகவும் பேட்டி…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் ஆயிரக்கணக்கான பழங்குடியினர் வசித்து வருகின்றனர், இந்நிலையில் இன்று உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, கொடைக்கானல் கீழ்மலை கிராமமான கோரகொம்பு மலைக்கிராமத்தில் பழங்குடியினர் தினம் கொண்டாடப்பட்டது,
இந்த கொண்டாடத்தில் பழங்கால இசை வாத்தியங்கள் முழங்க,செடி கொடிகளை இடுப்பில் கட்டி கொண்டு சுமார் 50க்கும் மேற்பட்டோர் பாரம்பரிய நடனமாடினர்,மேலும் வனப்பகுதியில் தேன் மற்றும் கடுக்காய் சேகரிக்க செல்லும் போது பாடும் பாடல்களை பாடி தங்களது பாரம்பரியத்தை நினைவு கூறி சிறப்பாக ஆடி,பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்,
மேலும் இந்த பழங்குடியினர் தின விழாவில் பட்டியக்காடு,கருவேலம்பட்டி,பூத மலை, கோரகொம்பு,
செம்பிரான்குளம் ,சவரிக்காடு,கடமன் ரேவு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்,
மேலும் தற்போது வரை பழங்குடியின மலைக்கிராமத்தில் சாலை வசதி,கழிப்பறை வசதி,குடிநீர் வசதி மற்றும் ஆதார் அட்டை,ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்றும் தங்களது மலைக்கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் தமிழக அரசிற்கு பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…