23 வருட வழக்கு.. விசாரணையை நிறுத்தி வைக்கச் சொல்லி காங்கிரஸ் தலைவர் வழக்கு.. மறுத்த உயர்நீதிமன்றம்..

உத்தரபிரதேச மாநிலம் வாரனாசி பகுதியில், கடந்த 23 வருடங்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

சன்வாஷின் விவாகரம் தொடர்பாக நடந்த இந்த போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா உட்பட பல்வேறு காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

அப்போது, இந்த போராட்டம் கலவரமாக மாறி, அங்கிருந்த பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் குற்றவாளியாக ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கருதப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை சமீபத்தில் நடந்து வந்த நிலையில், சுர்ஜிவாலாவுக்கு, பிணையில் வெளியில் வர முடியாத வகையில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த பிடிவாரண்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், அந்த வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், அலகாபாத் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரது இரண்டு கோரிக்கைகளையும் நிராகரித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News