கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ஆச்சாரியா என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடந்துள்ளது. அப்போது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 5 மாணவர்கள் உயிரிழந்த நிலையில்., 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த இரயில்வே காவல்துறையினர்., மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில்., இரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன், தண்டவாளத்தை கடந்துள்ளது. அப்போது எதிரேவந்த இரயில் மோதி., வேன் 50கிமீ தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள்., மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கேட் கீப்பரின் அலட்சியத்தால் மட்டுமே இந்த விபத்து நேர்ந்ததாக கூறி அப்பகுதி மக்கள் கேட்கீப்பரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து தகவலறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்துக்குறித்து வேதனை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும்., பலத்த காயம் அடைந்த மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும்., லேசான காயம் அடைந்த மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயை நிதியுதவியாக அறிவித்துள்ளார்..