தெலுங்கானாவில் விபரீதம்..! ஓடும் லாரியில் தலையை விட்டு தற்கொலை.!

தெலுங்கானா மாநிலம் மக்பூபாபாத் மாவட்டம்
கேசமுத்திரம் மண்டலம் சைதன்யாநகர் காலனியை சேர்ந்த ஜிலுகர பாபு, சாந்தம்மா ஆகியோரின் மகன் அசோக் (37) . இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் வயிற்று வலி காரணமாக மானுகோடா பட்டணத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றுள்ளார், அப்படியே ஊரில் இருக்கும் தனது தங்கை அமலாவையும் பார்த்து வருவதாக தந்தை பாபுவிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.‌

முதலில் தங்கை வீட்டிற்கு சென்று அவரை பார்த்து நலம் விசாரித்த பின் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டார் அசோக்.பின்னர் மருத்துவமனையில் இருந்து திரும்பி வரும் போது சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் அடியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் அசோக்.

இது பற்றி தகவல் கிடைத்ததும், விரைந்து வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அசோக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்துகின்றனர் .விசாரணையின் போது அசோக் தந்தை அளித்த தகவல்களின் அடிப்படையில் வயிற்று வலி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.ஆனால் இதுகுறித்து, காவல்துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News