ஜாபர்கான்பேட்டை பகுதியில் அடையாளம் தெரியாத நபர் மாநகராட்சி பூங்காவில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை ஜாபர்கான் பேட்டை உள்ள திருநகர் வள்ளுவர் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா செயல்பட்டு வருகிறது.
இந்த பூங்காவில் மாலை நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் பொழுதை கழிப்பதற்காகவும் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக வந்து செல்வார்கள்.இந்நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் பூங்காவில் உள்ளே அமர்ந்து கொண்டு பொதுமக்கள் யாரும் இல்லாத நேரத்தில் தான் கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த நபர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எம்.ஜி.ஆர் நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் எரிந்த நிலையில் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடல் முழுவதும் எரிந்த நிலையில் இருந்ததால் இவா் யாா் எங்கிருந்துவந்தாா் இந்த தற்கொலையின் நோக்கம் என எதுவும் தெரியாத காரணத்தினால், மாநகராட்சி பூங்காவில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.