சென்னை கிண்டி ஜாபர்கான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் முரளி. இவர் கடந்த சில நாட்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்
அப்போது சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக், பூபாலன் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோர் பணத்திற்காக தொழிலதிபரை கடத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில்., முகநூலில் போலி கணக்குகளை தொடங்கி அது மூலமாக ஆசை வார்த்தைகளை கூறி நேரில் வரவழைத்து வலையில் விழ வைத்து பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அப்போது தான் முரளி கார்களை விற்பனை மேற்கொள்ளுவதற்காக விளம்பரங்களை முகநூலில் பதிவிட்டு இருந்தபோது அவரிடம் பணம் இருப்பதை அறிந்து அவரை கடத்தி சென்று கொள்ளையடிக்க முடிவு செய்து என் மனைவி தான் சினேகா என கூறி கார்த்திக் சண்டையிட்டு கடத்தி சென்றதும் தெரியவந்துள்ளது
பெண் விவகாரம் என்பதால் புகார் அளிக்க மாட்டார் என நினைத்த நிலையில் சிக்கி கொண்டதாகவும், கொள்ளை அடித்த பணத்தில் ஈசிஆர் பகுதியில் ரெசார்ட் புக் செய்து உல்லாசமாக இருந்த நிலையில் போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.
மேலும் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.