சென்னை மடிப்பாக்கம் சதாசிவம் நகர் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் சிவன் கோயில் அமைந்துள்ளது இதனால் தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தருகிறார்.
இந்நிலையில் சிவன் கோயில் அருகாமையில் இருக்கும் காலியிடங்களில் டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள், ஆகியவை கொட்டப்பட்டு வருவதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு சிரமங்கள் ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக மழை காலங்களில் குப்பைகள் சாலைகளில் வழிந்து ஓடுவது மட்டுமல்லாமல் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய் தொற்று பரவும் அபாய சூழ்நிலவுதாகும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே கோயிலுக்கு அருகாமையில் முக்கிய சாலையில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.