சரிந்தது தங்கம் விலை..!! இன்றைய விலை நிலவரம்..?

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.. இதனால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 24 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 82 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 987 ரூபாய்க்கும்., சவரனுக்கு 656 ரூபாய் குறைந்து 79 ஆயிரத்து 896 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 75 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 155 ரூபாய்க்கும்., சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து 73 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 540 ரூபாய்க்கும்., சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 60 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 119 ரூபாய்க்கும்., ஒரு கிலோ வெள்ளி விலை 1000 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News