தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.. இதனால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 24 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து 10 ஆயிரத்து 69 ரூபாய்க்கும்., சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து 80 ஆயிரத்து 552 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 230 ரூபாய்க்கும்., சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 73 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ஆயிரத்து 600 ரூபாய்க்கும்., சவரனுக்கு 60 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 119 ரூபாய் 90 காசுக்கும்., ஒரு கிலோ வெள்ளி விலை 100 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.