தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.. இதனால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 24 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து 10 ஆயிரத்து 151 ரூபாய்க்கும்., சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 81 ஆயிரத்து 208 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 305 ரூபாய்க்கும்., சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 74 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 660 ரூபாய்க்கும்., சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 61 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 119 ரூபாய் 90 காசுக்கும்., ஒரு கிலோ வெள்ளி விலை 100 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.