ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை..!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உச்சம் தொட்டுள்ளது.. இதனால் பொதுமக்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

தமிழகத்தில் 24 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்து 10 ஆயிரத்து 108 ரூபாய்க்கும்., சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து 80 ஆயிரத்து 864 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 265 ரூபாய்க்கும்., சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 74 ஆயிரம் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 625 ரூபாய்க்கும்., சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 122 ரூபாய்க்கும்., ஒரு கிலோ வெள்ளி விலை 1000 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News