நாளையும் விடுமுறை.. யார் யாருக்கு? முழு விவரம் உள்ளே!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே, மிக்ஜாங் புயல் மையம் கொண்டதில் இருந்து, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுார், காஞ்சிபுரம் ஆகிய 4 வடமாவட்டங்களில், கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால், புயல் கரையை கடந்த நேற்றைய தினமும், வெள்ளம் தேங்கி இருப்பதால், இன்றும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று தமிழக அரசு சார்பில், அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுார், காஞ்சிபுரம் ஆகிய 4 வடமாவட்டங்களில், நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ள நீர் தேங்கியிருப்பதால், விடுமுறை வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News