மேலூர் அருகே கோவில் மணியை திருடிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்ட மேலூர் அருகே கல்லம்பட்டி கோட்டனத்து முனியாண்டி கோவிலில் கடந்த மார்ச் மாதம் ரூபாய் 1 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கோவில் மணியை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகி மந்தையன் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வண்ணாம்பாறைபட்டியைச் சேர்ந்த வல்லவன் (25), கல்லம்பட்டியை சேர்ந்த பிரபு (27), மற்றும் பாண்டிச்செல்வம் (25) ஆகிய மூன்று பேரை மேலூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.