தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக திகழ்ந்தவா் நடிகா் மற்றும் தேமுதிக தவைவருமான கேப்டன் விஜயகாந்த்.நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த இவா்,சமீபத்தில் உயிரிழந்தாா்.இவாின் இறப்புக்கு நடிகா் விஜய் அஞ்சலி செலுத்த சென்றிருந்தபோது,கூட்டத்தில் ஒருவர் இவா் மீது செருப்பை வீசினாா்.இந்த சம்பவம் மாபெரும் சா்ச்சையாகி பலரால் பேசப்பட்டது.
இதுகுறித்து , தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை சாா்ந்த மாவட்ட தலைவரான ஒருவா் இதற்கு கண்டிப்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.இந்த புகரானாது தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதற்கு பலரும் தங்களது விமா்சன கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.