சென்னை தாம்பரம் அடுத்த கடப்பேரி குளக்கரை தெருவை சேர்ந்தவர் முருகன் இவருடைய மகள் ஷாலினி குழந்தை பிறந்து பத்து நாட்களே ஆன நிலையில் நேற்று வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது திடிரென பலத்த வெடி சத்தத்துடன் வீட்டின் மேற்கூரை சிதரியது இதனால் பதற்றமடைந்த ஷாலினி கூச்சலிட்டபடி வெளியே ஓடி சென்றுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பார்த்த போது வெடி குண்டு வீசியது தெரியவந்துள்ளது.
பின்பு அருகில் வசித்து வரும் பிரபல வழிப்பறி கொள்ளையன் கோல்டன் மணி பாதிக்கபட்டவரிடம் தெரியாமல் வெடிகுண்டு வீசியதாகவும் வீட்டின் ஓடை மாற்றுவதற்கு பணத்தையும் வழங்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடப்பேரி பகுதியை சேர்ந்த கோல்ட் மணி (21), நண்பர்கள் பால் சூர்யா (24), ஸ்ரீதர் (20), வெங்கடேசன் (22) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரனையில் பட்டாசு மருந்து, களிமண், கற்கள் ஆகியவற்றை கொண்டு முதல் முறையாக வெடி குண்டு தயாரித்து ஒத்திகையில் ஈடுபட்டதை ஒப்புகொண்டதை அடுத்து அவர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் கத்தியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.