பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா ஆகிய படங்களை இயக்கியவர் அருண்குமார். இவர் தற்போது நடிகர் விக்ரமை வைத்து, புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார்.
இந்த திரைப்படத்திற்கான பின்னணி பணிகள், தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் பணியாற்ற உள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் பெயர்களை, படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இப்படத்தில் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் இணைந்துள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒளிப்பதிவாளர், கர்ணன், மாமன்னன், தரமணி, நாச்சியார், மேற்கு தொடர்ச்சி மலை, பேரன்பு உள்ளிட்ட, பல்வேறு தரமான படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.