பழனியில் அடுத்தடுத்து நிகழும் திருட்டு சம்பவம் அதிர்ச்சியில் மக்கள்…!!!

பழனியில் அடுத்தடுத்து இரண்டு கடைகள் மற்றும் கோவில் மூன்று இடங்களில் திருட்டு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது உழவர் சந்தை ,சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் , வங்கிகள் என முக்கிய சாலையான சண்முகபுரம் சாலையில் நேற்று இரவு விஜயகுமார் என்பவரது டீ கடை ,மற்றும் அருகில் கணேசன் என்பவரது டீ கடை என இரண்டு டீக்கடைகளில் சுமார் 5000 ருபாய் பூட்டை உடைத்து மர்ம நபர் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தட்டான்குளம் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் மர்ம நபர் பூட்டை உடைத்து திருட முயன்ற காட்சிகளும் பதிவு செய்யபட்டுள்ளது. இதுகுறித்து கடை மற்றும் கோவிலில் நடைபெற்ற திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து அங்கு பொறுத்தபட்ட சிசிடிவி காட்சிகளை கொண்டு பழனி நகர போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனியில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News