பெரியப்பாளையத்து பவானி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

ஆடி திருவிழாவை முன்னிட்டு திருவேற்காடு பெரியப்பாளையத்து பவானி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்
திருவேற்காடு சுந்தரசோழப்புரத்தில் உள்ள ஸ்ரீ பெரியப்பாளையத்து பவானி அம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வான தீமிதி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஆலயத்தின் முன் அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் இறங்கி, தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக பக்தர்கள் கரகம் ஏந்தி வீதியுலா வந்தனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

RELATED ARTICLES

Recent News