திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பஜார் சாலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து போலீஸ் ஜிப்பை இளைஞரை போலீசார் சினிமா பாணியில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சித்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீஸ் ஜீப்பை கடத்திக் கொண்டு தமிழ்நாடு வேலூர் வழியாக சென்று விட்டார். அப்போது ஆந்திரா மாநிலம் போலீசார் தமிழ்நாட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வந்தவாசி பழைய பேருந்து நிலையம் பஜார் சாலை வழியாக ஆந்திரா மாநிலம் போலீஸ் ஜீப் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சினிமா பாணியில் வேகமாக துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். விசாரணை மேற்கொண்டபோது ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (24) என்று தெரியவந்தது. பிறகு போலீஸ் ஜிப்பை பறிமுதல் செய்து ஆந்திரா மாநிலம் சித்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் ஜிப்பை கடத்தி வந்த இளைஞரை வந்தவாசி போலீசார் சினிமா பாணியில் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.