சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவமனை எதிரே பிளாட்பார்மில் வசித்து வருபவர்கள் விமல் – லதா தம்பதியினர்.
நேற்று மாலை லதா அப்பகுதியில் இருந்த ஒரு ஆணிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவரது கணவர் விமலுக்கும், லதாவுக்கும் இடையே தகராறு ஏற்ப்பட்டுள்ளது.
இதனால் அருகில் இருந்த பீர்பாட்டிலை உடைத்து கணவனின் நெஞ்சில் லதா குத்தியுள்ளார்.
ரத்தம் வெள்ளத்தில் சரிந்த அவரது கணவர் விமலை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தற்போது சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக விமலின் மனைவி லதாவிடம் வேப்பேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.