ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு பள்ளிக்கு சீர்வரிசை கிராமம் மக்கள் மேளம் தாளம் முழங்க வழங்கினர்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ளது ஜம்புமடை அரசு உயர் நிலைப் பள்ளி இங்கு 127 மாணவ – மாணவிகள் 8 ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி அறிவு இல்லாத நிலையில் தொடக்க பள்ளி மட்டுமே சுமார் 20 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர்.
இங்குள்ள விவசாய மக்களின் பிள்ளைகள் பள்ளி மேல் படிப்பு பயில 15 கீமீ தூரம் செல்ல வேண்டி இருந்தது. இதனை அறிந்த கிராம மக்கள் பட்டா நிலத்தை 2 லட்சம் ரூபாய் செலவில் பள்ளி கட்டிடம் கட்ட அனுமதித்தனர்.
உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் இதற்கு ஊர் மக்கள் ஒத்துழைப்பு நல்கிய நிலையில் இன்று 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீர் வரிசையாக டேபிள் சேர் பீரோ உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுசீலா தலைமை தாங்கினார் இதில் ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளி மாணவ -மாணவிகள் பங்கேற்றனர்.
முன்னதாக ஊர் எல்லையில் இருந்து மேளம் தாளம் முழங்க பள்ளி மாணவ-மாணவிகள் உடன் பெற்றோர்கள் சீர் வரிசை உடன் ஊர்வலமாக சென்றனர்.
இதனை அடுத்து பள்ளி சார்பில் சீர் வரிசை வழங்கி ஊர் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தி கெளரவிக்க பட்டது.