கி.பி. 1303-ம் ஆண்டு சித்தூர்கரை (ராஜஸ்தான்) டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி தாக்க வரும்போது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி கயிறு அனுப்பி போரை நிறுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன.
இப்போது தான் காதலிக்க விரும்பாத அல்லது தனக்கு பிரச்னை ஏற்படுத்தும் ஆண்களுக்கு இளம் பெண்கள் ராக்கி கட்டி குழப்பத்தை அல்லது பிரச்னையை சமாளிப்பது சகஜமாகி விட்டது.. அந்த ராக்கி கட்டும் ரக்சா பந்தன் என்பது நிகழ்ச்சியை இம்மாதத்தின் பவுர்ணமி நாளில் கொண்டாடப்படும் .
இந்நாளில் பெண்கள் தமது உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் (ராக்கி) கட்டுவது முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது.
ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு பரிசு அல்லது பணம் அளிப்பதும் வழக்கம்.
பல ஆண்டுகளாக வடஇந்தியாவில் பிரபலமாக இருந்த இந்த நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருது..
இந்த கயிறு கட்டி ஒருவரை சகோதரனாக தேர்ந்தெடுக்க மட்டும் ஒரு பெண் அக்கயிறை கட்டுவதில்லை. ஒரு ஆண் தன்னை சகோதரியாக ஏற்றுக்கொள்ள மாட்டாரா என்ற ஏக்கம் சகோதரனோடு பிறக்கதா ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் இந்த ஏக்கம் இருக்கும்.. அந்த குறையை தீர்க்கும் விதமாக இந்த ரக்ஷபந்தன் கொண்டாடப்படுகிறது..