டெல்லியை அடுத்து துவாரகாவில் பெண் விமான ஓட்டுநறும்,விமான பணியாளராக அவரது கணவரும் வசித்து வருகின்றனர் . இந்நிலையில் ,10 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு நியமித்து,அச்சிறுமியை அவர்கள் அவ்வப்போது அடித்து துன்புறுத்தியுள்ளனர்.இன்று அச்சிறுமியின் கை,கால்களில் காயங்கள் இருந்ததை கண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் அச்சிறுமியை அத்தம்பதியினர் அடித்து துன்புறுத்துவார்கள் என அப்பகுதி மக்கள் சிலர் குற்றம்சாட்டியதால் ஒரு கூட்டம் கூடி அத்தம்பதியை கடுமையாக தாக்கியுள்ளனர்,மன்னிப்பு கேட்டும் தொடர்ந்து தாக்கியதால்.இது சார்ந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.