சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மாணவிகள் இரவு முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை உடனடியாக கல்லூரியிலிருந்து நிரந்தரப் பணி நீக்கம் செய்வதோடு, அவர்களை விரைந்து கைது செய்து பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என மாணவிகள் அறிவித்துள்ளனர்.