மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிகழ்ச்சிகள் ஒரு வார காலத்திற்கு ரத்து..!!

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை 9.30 மணி அளவில் காலமானார்.அவருக்கு வயது 102.

சங்கரய்யாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சிறப்பு அமரர் ஊர்தி மூலம் கொண்டு செல்ல்லப்பட்டது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் : மறைந்த சங்கரய்யாவின் உடல் தற்போது குரோம்பேட்டையில் உள்ள அவரது சொந்த இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இன்று மதியம் 2 மணி முதல் நாளை காலை 10 மணி வரை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிகழ்ச்சிகள் ஒரு வார காலத்திற்கு ரத்து செய்யப்படுகிறது. கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்.

மறைந்த சங்கர் அய்யாவின் இறுதி சடங்கில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் எனவும் இவரின் இறப்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த மக்களின் பேரிழப்பு என அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News