பூண்டு விளைச்சல் குறைந்துள்ளதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூண்டு வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாகவே கோயம்பேடு மார்க்கெட்டில் பூண்டு விலை அதிகரித்துள்ளது.
தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பூண்டு ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூண்டு வரத்து குறைந்து விட்டதால் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நமது அன்றாட உணவில் பூண்டுக்கு முக்கிய இடம் உண்டு. பூண்டின் விலை உயர்வால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.