384 அத்தியாவசிய மருந்துகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் 1 முதல் உயர்கிறது. அத்தியாவசிய மருந்துகளின் விலை 11 சதவிகிதத்திற்கு மேல் உயர உள்ளது.

காய்ச்சல், தொற்றுகள், தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை மற்றும் இதய நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் 1 முதல் உயர்கிறது.
மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மருந்துகளின் விலையை உயர்த்த வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. இந்நிலையில் மருந்துகளின் விலையை உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.