தன்னை பற்றி கூகுளில் தேடிய அதிகாரிக்கு மரண தண்டனை கொடுத்த வடகொரியா அதிபர்

வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். இங்கு வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள தடை உள்ளது. மேலும் அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களும் வெளியுலகத்திற்கு தெரிவிக்கப்படுவதில்லை. இதற்காக, வட கொரியாவில், இணையதளம் பயன்படுத்த, பல கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்நிலையில், ‘பியூரோ 10’ என்றழைக்கப்படும், அந்த நாட்டின் உளவு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் பற்றிய தகவல்களை கூகுளில் தேடி உள்ளார். இதை அறிந்து கொண்ட கிம் ஜாங் உன் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

துப்பாக்கியால் சுடும் படைப் பிரிவினரால், அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News