இந்திய சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தமிழ் நாட்டில் உள்ள சிவகாசியில் பிறந்த இவர், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வெற்றிக்கொடி நாட்டினார்.

பின்னர் பிரபல தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்த ஸ்ரீதேவி, தனது 54-வது வயதில் அகால மரணமடைந்தார். இந்த நிலையில் இவரது, பயோகிராபி புத்தகம் ஒன்றை, எழுத்தாளர் தீரஜ்குமார் எழுதியுள்ளார். மேலும் இப்புத்தகத்திற்கு ஸ்ரீதேவி தி லஃப் ஆப் லெஜண்ட் என பெயர் வைத்துள்ள இவர், அவரது குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது.