சூளைமேட்டில் மழைநீர் வடிகால் தொட்டியில் பெண் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.
சூளைமேடு பொன்னுசாமி வாத்தியார் தெரு பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் அளித்த புகாரில் சூளைமேடு போலீசார் 194 BNSS (இயற்கைக்கு மாறான மரணம்) வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முதல் தகவல் அறிக்கையில் தீபாவின் தாயான லட்சுமி ( 02.09.2025 )-ம் தேதி காலை 10.30 மணிக்கு சூளைமேடு போலீசார் ராஜேஸ்வரி என்பவர் லட்சுமி என்பவர் வீட்டிற்கு வந்து தங்களது மகள் தீபா என்பவர் இன்று (2-ம் தேதி) வீரபாண்டி நகர் 1வது தெருவில் உள்ள மழைநீர் வடிக்கால் தொட்டியில் கால் தடுக்கி விழுந்து கிடந்தது இறந்ததாக தெரிவித்துள்ளதாக வழக்கு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனது இரண்டாவது மகள் தீபா என்பவர் ஜெகன் என்பவருடன் திருமணம் ஆகி அவர்களுக்கு ஜெனிபர் வயது 20 என்ற ஒரு மகள் உள்ளார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அவரது கணவர் ஜெகன் என்பவர் தீ விபத்தில் இறந்துவிட்டதாக தீபாவின் தாய் லட்சுமி தெரிவித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தீபா வீட்டு வேலை செய்து வருவதாகவும், அடிக்கடி அவரது நண்பர்கள் வீடு, எனது உறவினர்கள் வீட்டிற்கு சென்று தங்கி வருவாள் கடந்த ஒரு வாரமாக எங்கள் வீட்டிற்கு வரவில்லை. இவள் அடிக்கடி வெளியில் சென்று தங்குவதால் நாங்கள் யாரும் தேடவில்லை அவளிடம் மொபைல் போன் கிடையாது. யாரிடமாவது மொபைல் வாங்கி பேசுவாள் எனவும் தீபாவின் தாய் தெரிவித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.