இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது கீழே விழுந்த சிறுமி மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் உடல் உறுப்பு தானம்: அரசு சார்பில் வட்டாட்சியர் மரியாதை செலுத்தினார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சீரங்கவுண்டனூரை சேர்ந்த ரவி, செல்வநாயகி இவர்களது இளைய மகள் ஓவியா வயது 7 கடந்த 29.08.25 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் அவருடைய மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வேகத்தடையில் செல்லும் பொழுது குழந்தை ஓவியா தவறி விழுந்து தலையில் அடிபட்டு மூளை சாவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஓவியாவின் உடல் உறுப்பினை கோவை மாவட்டத்தில் உள்ள கே.எம்.சி மருத்துவமனையில் இன்று குடும்பத்தினரின் ஒப்புதலுடன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
இதில் கண்கள், சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தானம் செய்யப்பட்டது.
உயிரிழந்த ஓவியாவின் உடல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீரங்ககவுண்டனூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.
உடல் உறுப்பு தானம் வழங்கிய ஓவியாவிற்கு அரசு சார்பில் அரவக்குறிச்சி வட்டாட்சியர் மகேந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.