அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து காட்டுமன்னார்குடி நோக்கி அரசு நகரப்பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுமி திடீரென சாலையின் குறுக்கே ஓடி வந்துள்ளார்.

சிறுமியை காப்பாற்ற பேருந்து ஓட்டுநர் அரசு பேருந்தை சாலையின் ஓரமாக திருப்பியுள்ளார். இதில் பேருந்து தடுப்பு சுவர் மீது மோதியதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மாடி வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. இதனால் சாலையில் குறுக்கே வந்த சிறுமியும், பயணிகள் உட்பட அனைவரும் உயிர்த்தப்பினர்.