போலீஸ் டார்ச்சர் செய்வதாக விஷம் அருந்தி தற்கொலை முயன்று வீடியோ வெளியிட்ட இளைஞர் உயிரிழந்தனர்.
செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி பார்த்திபன் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், காரனோடை பகுதியைச் சேர்ந்த சுமார் 29 வயதான மோகன்ராஜ் என்ற இளைஞர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பின்னர் காவலில் எடுத்து விசாரித்த போலீசார் பாடியநல்லூர் பார்த்திபன் கொலை வழக்கில் மோகன்ராஜ் போலியாக சரண்டைந்துள்ளார் என கூறி அவரை இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்த்து மறுத்து விட்டனர்.
அதைவேளையில் 30 கிலோ கஞ்சா வாங்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக வழக்கு பதிவு செய்து மோகன்ராஜ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 2023 முதல் சுமார் 14 மாதங்கள் சிறையில் இருந்த மோகனராஜ் ஜாமினில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து அவர் வெளியே வந்துள்ளார்.
மோகன்ராஜ் வெளியே வந்த பின்னரும் சோழாவரம் போலீசார் அவர் மீது வழக்கு போடுவதாக நெருக்கடி கொடுத்ததாகவும், மேலும் அவரது காதலி ஷாலினி என்ற பெண்ணிற்கும் நெருக்கடி கொடுத்ததாகவும் வீடியோ வெளியிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.15) அன்று ஆந்திராவில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.
பின்னர் அவர் அங்கு அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற வந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மோகன்ராஜ் இறந்துவிட்டார்.
மோகன்ராஜ் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, “தப்பு பண்ணா மட்டும் பொய் கேஸ் போடுங்க, தப்பு பண்ணாதவங்க வீட்டுக்கு போய் டார்ச்சர் பண்ணாதீங்க” என்று பேசி ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார். போலீஸ் பொய் வழக்கு போடுவதால் தான் தற்கொலைக்கு முடிவெடுத்ததாக இறந்து போன நபர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.