47-வது சென்னை புத்தகக் காட்சி நாளை தொடங்குகிறது!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47-ஆவது சென்னை புத்தகக் காட்சி-2024 சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் தொடங்குகிறது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த புத்தக காட்சி ஜன.21 வரை மொத்தம் 19 நாள்கள் நடைபெறவுள்ளது. வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகக் காட்சியில் சுமார் 1,000 அரங்குகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News