அண்மைக் காலமாக நடிகர் விஜய் டிவோர்ஸ் செய்ததாக அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதாவது வாரிசு ரிலீஸ் தொடங்கியது முதலே இவருக்கும், மனைவி சங்கீதாவுக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்பட்டு வந்தது. மேலும் இதனை உறுதிபடுத்தும் விதமாக, அனைத்து பட விழாவுக்கு மனைவியை அழைத்து செல்லும் விஜய், வாரிசு இசை வெளியீட்டு அழைத்து செல்லவில்லை.
இது தொடர்பாக நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது அண்ணி வொகேஷனுக்காக லண்டன் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஜேஎஸ்கே. கோபி, விஜய் சங்கீதா புகைப்படத்தை குறிப்பிட்டு ட்வீட் ஒன்று செய்துள்ளார்.

அதில் கடந்த இரண்டு மாதமாக நடிகர் விஜய் அவர்கள் இல்லற வாழ்க்கை குறித்தும், அவரது மனைவி குறித்தும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது பதிவிட்டுள்ளார். தற்போது இவரது பதிவுக்கு விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.